- கடந்த 18-ந் தேதி மாலை 4 மணியளவில் நகைகடையில் ஊழியர்கள் ரஞ்சித் மணிகண்டன் ஆகியோர் இருந்தனர்.
- அவர்கள் கையில் வைத்திருந்த கத்தி, உருட்டுகட்டை, பீர் பாட்டில்கள், கற்களை கொண்டு கடைகண்ணாடியை அடித்து உடைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை வைசாள் வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 52) இவர் கொசக்கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளார்.
கடந்த 18-ந் தேதி மாலை 4 மணியளவில் நகைகடையில் ஊழியர்கள் ரஞ்சித் மணிகண்டன் ஆகியோர் இருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடி கடைக்குள் புகுந்தனர்.
அவர்கள் கையில் வைத்திருந்த கத்தி, உருட்டுகட்டை, பீர் பாட்டில்கள், கற்களை கொண்டு கடைகண்ணாடியை அடித்து உடைத்தனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை சூறையாடிவிட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கடை உரிமையாளர் முருகன் பெரியகடை போலீசார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நகை கடையை சூறையாடியதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். நகைக்கடை உரிமையாளர் முருகனின் சம்மந்தி கடலூரில் வசித்து வருகிறார். அவர் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை அவர் கட்டவில்லை என தெரிகிறது.
இந்த பிரச்சனையில் முருகன் தனது சம்மந்திக்கு ஆதரவாக செயல் பட்டதால் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் ஆத்திரமடைத்து முருகன் கடையை சூறையாடியதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.