புதுச்சேரி

சிட்டு குருவிகளுக்காக கூண்டு தயாரித்த போது எடுத்த படம்.

சிட்டு குருவிகளுக்காக 8 அடி மெகா கூண்டு தயாரிப்பு

Published On 2023-03-19 04:41 GMT   |   Update On 2023-03-19 04:41 GMT
  • உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் இனம் அழிவை சந்தித்து வருகிறது.சிட்டுக்குருவிகளை பாதுகாக்க பல்வேறு பறவை ஆர்வலர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
  • உணவு வைத்து சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் இனம் அழிவை சந்தித்து வருகிறது.சிட்டுக்குருவிகளை பாதுகாக்க பல்வேறு பறவை ஆர்வலர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதுகுறித்து புதுவை பசுமை இயக்க தலைவர் அருண் தெரிவித்ததாவது:-

ஆயிரக்கணக்கான கூண்டுகள் தயாரித்து புதுவை அரசு வழங்கி பொது இடங்களான பாரதி பூங்கா, கடற்கரை சாலை, தாவரவியல்பூங்கா உட்பட பல பகுதிகளில் பொருத்தி, அதற்கு உணவு வைத்து சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலக சிட்டுக்குரு விகள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 8 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட மெகா சிட்டுக்குருவிகள் கூண்டை தயாரித்து புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் ஒப்படைத்து, அவர் தெரிவிக்கும் இடத்தில் பொருத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதேபோல 4 மெகா கூண்டுகள் தயாரிக்கும் பணி நடந்து வருவதாகவும், விரைவில் இது புதுவையின் முக்கிய இடங்களில் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சிட்டுக்குருவிகள் தினத்தை யொட்டி கடலுக்கு அடியில் விழிப்புணர்வு பேனர் ஏற்றவும், தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு 500 சிறிய ரக சிட்டுக்குருவிகள் கூண்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News