பேனர் வைக்க தடை செய்ய தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்
- சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்
- தமிழ் ஒளி என்றத் தலைப்பில் பொதுச்செயலர் கவிஞர் திருபுவனை கலிய பெருமாள் தலைமையில் கவிதைப்போட்டி நடை பெற்றது. தொடர்ந்து சிந்தனை அரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுச்சேரி சிந்தனையா ளர்கள் பேரவை சார்பில் கவிதை போட்டி மற்றும் 124-வது சிந்தனை அரங்கம் ஜோதி கண் பராமரிப்பு மைய அரங்கில் நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். தமிழ் ஒளி என்றத் தலைப்பில் பொதுச்செயலர் கவிஞர் திருபுவனை கலிய பெருமாள் தலைமையில் கவிதைப்போட்டி நடை பெற்றது. தொடர்ந்து சிந்தனை அரங்கம் நடைபெற்றது.
புதுவை அண்ணல் காந்தி மக்கள் நலச் சங்க நிறுவனர் ஞான மூர்த்தி பங்கேற்று உரையாற்றினார். இதையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கவிஞர்க ளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் பேனர் வைக்க தடை செய்ய தலைமைச் செயலா ளர் தலைமையில் சமுக ஜனநாயக அமைப்புகள் அடங்கிய உயர் அதிகார குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
விழாவில் துணைத் தலைவர் மணிமேகலை, பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன், துணைச் செயலாளர்கள் விசாலாட்சி, ராஜாராம், உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் செயற் குழு உறுப்பினர் திவ்யா நன்றி கூறினார்.