புதுச்சேரி

 ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை தலைமை சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் முருகேசன் பேட்டி அளித்த போது எடுத்த படம்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முதல் முறையாக செய்து சாதனை

Published On 2023-09-15 08:33 GMT   |   Update On 2023-09-15 08:33 GMT
  • சிறுநீரக பாதிப்பு நோயாளிகளின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்த எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் எங்கள் இலக்கை அடைய பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம்.

புதுச்சேரி:

புதுவை மூலக்குளம் ஈஸ்ட்கோஸ்ட் மருத்து வமனையில் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பல ஆண்டாக சிறுநீரக செயலிழப்புடன் போராடி வந்த 36 வயது இளைஞருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தப் பட்டுள்ளது. அவருக்கு தன்னலம் பாராமல் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் தனது சிறுநீரகத்தை ஒருவர் தானம் கொடுத்தார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முருகேசன் தலைமையில் டாக்டர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் மற்றும் டாக்டர்கள் வெற்றிகரமாக இந்த அறுவை சி கிச்சையை செய்தனர். சிறுநீரகம் தானம் பெற்றவர், தானம் கொடுத்தவர் இருவரும் நலமுடன் உள்ளனர்.

இதுகுறித்து தலைமை சிறுநீரகவியல் நிபுணர் முருகேசன் கூறியதாவது:-

தொழில்நுட்ப வளர்ச்சி, மேம்பட்ட ஆராய்ச்சியின் உதவியோடு பல நோயாளிகளின் வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதை இந்த தருணம் உணர்த்துகிறது.

புதுவை, அண்டை மாவட்டங்களில் உள்ள சிறுநீரக பாதிப்பு நோயாளிகளின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்த எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோம். பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர், இறந்தவர்கள் தானம் செய்யும் சிறுநீரகத்தை பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் எங்கள் இலக்கை அடைய பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம்.

கடந்த ஆண்டு எங்கள் மருத்துவமனைக்கும், சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ நிபுணர்கள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

பெருநகரங்களுக்கு இணையான தரத்தில், அதைவிட குறைவான கட்டணத்தில் புதுவையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News