புதுச்சேரி

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் காட்சி.

தனியார் மதுக்கடையில் திடீர் தீ விபத்து

Published On 2023-10-04 06:15 GMT   |   Update On 2023-10-04 06:15 GMT
  • பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் 10-க்கும் மேற்பட்ட மதுக்கடை கள் இயங்கி வருகிறது.
  • மது பிரியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு செல்கின்றனர்

புதுச்சேரி:

பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் 10-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகிறது.

இங்கு தினமும் புதுவை மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த மது பிரியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சோரியாங்குப்பம் தனியார் மதுக்கடையில் உள்ள கேண்டீன் கீற்றுக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

கீற்றுக் கொட்டகை எரிவதை கண்ட மதுக்கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பாகூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் காற்று பலமாக அடித்ததால் கீற்றுக்கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. சம்பவ இடத்திற்கு வந்த பாகூர் போலீசார் தீ விபத்து குறித்து மதுக்கடை ஊழியர்க ளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற பல்வேறு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யவும் திட்டமிட்டு ள்ளனர்.

நள்ளிரவில் மதுக்கடையில் உள்ள கீற்றுக்கொட்டகை திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

Similar News