புதுச்சேரி

 கலங்கரை விளக்கம் மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி.

மின்னொளியில் ஜொலிக்கும் புதுவை கலங்கரை விளக்கம்

Published On 2023-09-21 09:26 GMT   |   Update On 2023-09-21 09:26 GMT
  • புதிய கலங்கரை விளக்கம் வம்பா கீரப்பாளையத்தில் துறைமுகம் அருகே கட்டப்பட்டது.
  • இன்று மட்டும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

இந்தியாவில் கலங்கரை விளக்கங்களை பராமரித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான சட்டம்

1927-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி கொண்டு வரப்பட்டது.

"கலங்கரை விளக்கச் சட்டம்" என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் கலங்கரை விளக்க சட்ட தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து கலங்கரை விளக்கங்களும் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் மின்னும்.

புதுவையில் 2 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. பழைய கலங்கரை விளக்கம் கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே பிரெஞ்ச் ஆட்சி காலத்தில் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அது தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.

புதிய கலங்கரை விளக்கம் வம்பா கீரப்பாளையத்தில் துறைமுகம் அருகே கட்டப்பட்டது. இந்த கலங்கரை விளக்கம் தற்போது மின்னொளியில் ஜொலிக்கிறது.

இன்று முதல் 3 நாட்களுக்கு கலங்கரை விளக்கம் மின்னொளியில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தை பார்வையிட நபர் ஒருவருக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்ப டுகிறது. ஆனால் இன்று மட்டும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News