அ.தி.மு.க. ஒருங்கிணைந்த மாநில செயலாளராக அன்பழகன் நியமிக்கப்பட்டதால் தொண்டர்கள் உற்சாகம்
- இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் அறிக்கை
- அ.தி.மு.க. வெளியேறி விட்டதால் சிறுபான்மையின இனத்தவர்களும், ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் என்ற தமிழ்வேந்தன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
புதுச்சேரியில் கிழக்கு - மேற்கு என இரு பிரிவாக செயல்பட்டு வந்த அ.தி.மு.க. ஒருங்கி ணைக்கப்பட்டு புதுச்சேரி மாநில செயலாளராக அன்பழகன் நியமிக்கப்பட் டுள்ளார். இதனால் இரு பிரிவாக செயல்பட்டு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் பணியாற்ற தொடங்கி உள்ளனர்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறி விட்டதால் சிறுபான்மையின இனத்தவர்களும், ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் தலைவர்கள் தற்போது அ.தி.மு.க. பக்கம் வர தொடங்கி விட்டனர். இதனால் அ.தி.மு.க. பலம் வாய்ந்த சக்தியாக மாறியுள்ளது.
மேலும் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பிறந்தநாள் நாளை(10-ந்தேதி)கொண்டாடப்பட உள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் தொண்டர்கள் இந்தாண்டு அவரது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட தொடங்கி விட்டனர்.
மாநில செயலாளரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பேனர்கள், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் தொண்டர்களி டையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.