புதுச்சேரி

செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பருவ மழை எதிர்கொள்ள ஆலோசனைக் கூட்டம் நடந்த காட்சி.

பருவ மழை எதிர்கொள்ள ஆலோசனைக் கூட்டம்

Published On 2023-11-16 08:17 GMT   |   Update On 2023-11-16 08:17 GMT
  • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
  • பாகூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

புதுச்சேரி:

பாகூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வயல்வெளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பகுதிகளில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தநிலையில், மழை வெள்ள பாதிப்பு நிலவரம், முன்னெச்சரிக்கை மற்றும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் பாகூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ, மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, மழை வெள்ள பாதிப்புகளை உடனடியாக சரி செய்வது, மின்தடை நேரங்களிலும் தடை இன்றி குடிநீர் வழங்குவது, மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்திட ஜே.சி.பி. இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில்,பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், பாகூர் துணை தாசில்தார் விமலன், மின் துறை இளநிலை பொறியாளர்கள் ஸ்டாலின், பிரபுராம், வேளாண் அதிகாரி பரமநாதன், பொதுப் பணித்துறை உதவி பொறியளர் ராஜன், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News