வேளாண் ஊழியர்கள் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
- விவசாயம் எப்படி முக்கியமோ அதேபோல அதிகாரிகளும் முக்கியமானவர்கள்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் வேளாண் துறையில் பணிபுரியும் பட்டதாரி வேளாண் அலுவலர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவது துரதிருஷ்ட வசமானது.
புதுவையின் பொருளா தாரத்தில் ஆதார துறையா கவும் முதுகெலும்பாகவும் விவசாயத் துறை உள்ளது. விவசாயம் எப்படி முக்கியமோ அதேபோல அதிகாரிகளும் முக்கியமானவர்கள்.
அவர்கள் மனக்குறை யோடு பணி புரிவது விவசாய வளர்ச்சியை பாதிக்கும். பட்டதாரி வேளாண் அலுவலர்களின் எல்லா கோரிக்கைகளும் நியாயமானவை. உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டியவை.
விவசாய அலுவலர்கள் 32 ஆண்டுகளாக ஒரே பதவியில் உள்ளனர். 8 ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. இது வழங்கப்பட்டிருந்தால் 4 முறை பதவி உயர்வு பெற்றி ருப்பார்கள்.
ஆனால் ஒரே பதவி யிலிருந்து ஓய்வுபெறு கின்றனர். இது நியாயமற்றது. சீனியாரிட்டி அடிப்படை யில் உடனடியாக துணை இயக்குனர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
வேளாண் அலுவலர் காலி பணியிடங்களில் சேர பிஎஸ்சி வேளாண் பட்டப்படிப்பு அவசியம் என பணி நியமன விதிகள் திருத்தப்பட வேண்டும். காலி பணியிடங்கள் அனைத்தையும் விதிக ளின்படி நிரப்ப வேண்டும். தகுதி வாய்ந்த டாக்டர் பட்டம் படித்த கூடுதல் வேளாண் இயக்குனரை முதல்வராக நியமிக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றி வேளாண்துறை ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.