அரசு தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1977-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு புலவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார்.
- மாணவர்கள் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்திக் கொண்டனர்.
புதுச்சேரி:
பாகூர் அடுத்த சேலியமேடு அரசு தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.
இதில் கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1977-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு புலவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார்.
ஆசிரியர் கோவிந்தசாமி, அருணாச்சலம், கலிய–பெருமாள், சிவராஜ், சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பள்ளி துணை ஆய்வாளர் (வட்டம் 3) பக்கிரிசாமி கலந்து கொண்டார்.
முன்னாள் மாணவர்கள் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்திக் கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் அரசு பள்ளியில் படித்து அரசு ஊழியர்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இனி வரும் சந்ததிகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொண்ட–னர்,இதில் ஒவ்வொரு முன்னாள் மாணவ-மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.