புதுச்சேரி

தீக்குளிக்க முயன்ற ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா

null

ஆம்புலன்ஸ் ஊழியர் தீக்குளிக்க முயன்றார்

Published On 2022-07-08 09:39 GMT   |   Update On 2022-07-08 09:44 GMT
  • புதுவை சுகாதார துறையின் கீழ் இயங்கும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு 42 டிரைவர்கள் உள்ளனர்.
  • இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்காக அடிக்கடி போராடி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை சுகாதார துறையின் கீழ் இயங்கும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு 42 டிரைவர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்காக அடிக்கடி போராடி வருகின்றனர். இந்நிலையில்ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா என்பவர் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி கொண்டார். பின்னர் தீப்பெட்டியை இயக்குனரிடம் கொடுத்து கொளுத்தும்படி கூறினார்.

42 டிரைவர்களுக்கு சம்பளம் வழங்க முதல்-அமைச்சர் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களை கொளுத்தி கொல்லுங்கள் என வேதனையுடன் தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்திய இயக்குனர், சம்பளம் வழங்க நிதித்துறையைத்தான் அனுக வேண்டும் என தெரிவித்தார்.

அங்கிருந்த ஊழியர்கள் ராஜா மீது தண்ணீரை ஊற்றி இயக்குனரின் காரில் முன் இருக்கையில் அமரவைத்து அனுப்பினர். இதனால் இயக்குனர் அலுவலக வளாகத்தில் 15 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News