நேருவீதியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்-எதிர்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தல்
- புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
- புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- புதுவையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணுவதற்கான நடவடிக்கைகள் ஏதும் அரசிடம் இல்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணுவதற்கான நடவடிக்கைகள் ஏதும் அரசிடம் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, புதுவை மக்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணாததாலும், வாகனங்கள் நிறுத்த இட வசதி ஏற்படுத்தப்படாததாலும் வார இறுதி நாட்களில் புதுவை மக்கள் நடமாட முடியவில்லை.
நகரில் வாகனங்களை நிறுத்த இட வசதியில்லையே என்ற ஒரு காரணத்திற்காகவே பலர் விடுமுறை தினத்தில் வீட்டில் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் நேரு வீதியில் உள்ள பழைய சிறைச்சாலையில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளனர். இது மேலும் மக்களின் போக்குவரத்திற்கும், வாகனங்கள் நிறுத்து வதற்கும் பிரச்சனை களையே உருவாக்கும்.
ஏற்கனவே முதல்- அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டபடியே குறைந்த பட்சம் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தத்தை கட்டி புதுவை நேரு வீதியில் வாகனங்கள் நிறுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.