புதுச்சேரி

கோப்பு படம்.

போட்டித்தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2023-05-20 07:57 GMT   |   Update On 2023-05-20 07:57 GMT
  • பயிற்சிகாலத்தில் உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படும்.
  • மாணவர்களுக்கு சிறப்பு தொழில் வழிகாட்டுதல் தன்னம்பிக்கை ஏற்படுத்துதல், போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளித்தல் நடக்கிறது.

புதுச்சேரி:

தேசிய வாழ்வாதார சேவை மைய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலம் புதுவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்த வர்களுக்காக தேசிய வாழ்வாதார சேவை மையம் அமைத்து அதன் மூலம் படித்த வேலையற்ற எஸ்.சி, எஸ்.டி சமூக மாணவர்களுக்கு சிறப்பு தொழில் வழிகாட்டுதல் தன்னம் பிக்கை ஏற்படுத்துதல், போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளித்தல் நடக்கிறது.

அரசு வேலைவாய்ப்பு பெற ஓராண்டு கால போட்டித்தேர்வு பயிற்சி, சுருக்கெழுத்தர் பயிற்சிகள் திறன் வாய்ந்த தனியார் பயிற்சி நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. வரும் 1-ந் தேதி பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. பயிற்சிகாலத்தில் உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படும்.

மேலும் போட்டித் தேர்வுக்கான எழுது பொருட்கள் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 27 வயதுக்குட்பட்ட புதுவையை சேர்ந்த பிளஸ்-2 முடித்தவர்கள் சுய விபரங்களை வரும் 31-ந் தேதிக்குள் துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார மையம், 2-ம் தளம், கனரா வங்கி, ரெட்டியபார்பாளையம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News