பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்துக்கு புதிய கிராம பஞ்சாயத்தார் நியமனம்
- புதுவை காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி கிராமத்தில் இரு தரப்பினரிடையே நிலவி வந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக நீண்ட காலமாக புதிய கிராம பஞ்சாயத்தார் நியமனம் செய்யப்படவில்லை.
- அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரத்திடம் முறையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி கிராமத்தில் இரு தரப்பினரிடையே நிலவி வந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக நீண்ட காலமாக புதிய கிராம பஞ்சாயத்தார் நியமனம் செய்யப்படவில்லை.
இதனால் கிராம கோவில் திருப்பணிகள் போன்ற முக்கியப் பணிகள் முடங்கின.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரத்திடம் முறையிட்டனர். கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு இருதரப்பினரிடையே எம்.எல்.ஏ. சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி கிராமத்தில் அமைதியான சூழல் நிலவிடவும் புதிய கிராம பஞ்சாயத்தார்களை நியமனம் செய்திடவும் வழிவகை செய்தார்.
இதன் விளைவாக புதிதாக கிராம பஞ்சாயத்தார் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கிராம பஞ்சாயத்தார் எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி கிராம முன்னேற்றத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயல்பட்டு பல ஆண்டு காலமாக முடங்கிக் கிடக்கும் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கல்யாண சுந்தர எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.