புதுச்சேரி

கைதான வடமாநில வாலிபரின் கூட்டாளிகள் 2 பேர் ஜெயிலில் அடைப்பு: என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை

Published On 2023-11-10 06:28 GMT   |   Update On 2023-11-10 06:28 GMT
  • புதுவையில் நடந்த சோதனையில் எல்லைப்பிள்ளைச் சாவடி பகுதியில் குடோனில் பதுங்கியிருந்த வடமாநில வாலிபர் பாபுவை கைது செய்தனர்.
  • 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி:

சட்ட விரோதமாக வெளிநாட்டினரை இந்தியாவில் பணியமர்த்தியதாக வந்த புகாரை தொடர்ந்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 44 இடங்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

புதுவையில் நடந்த சோதனையில் எல்லைப்பிள்ளைச் சாவடி பகுதியில் குடோனில் பதுங்கியிருந்த வடமாநில வாலிபர் பாபுவை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து போலி ஆதார் கார்டு, உயர்ரக செல்போனை பறிமுதல் செய்தனர்.

அவரை சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். கூட்டாளிகள் சிக்கினர்

அவர் கொடுத்த தகவல்படி பாபுவுடன் ஒரே அறையில் தங்கி இருந்த மேலும் 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கொல்கத்தாவை சேர்ந்த ஆரிப்ஷோக் (வயது 20), லால்கோலா பகுதியை சேர்ந்த சதீம் ஷீக் (30) என்பதும், கட்டிட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது 160 கிராம் அளவில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தார்.

அவர்கள் வேறு ஏதேனும் சதி செயலில் ஈடுபட்டனரா என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News