பஸ் ஏன் தாமதம் என கேட்ட உதவி பேராசிரியருக்கு அடி உதை:தனியார் பஸ் புக்கிங் அலுவலக ஊழியர் கைது
- பிஜுகுமார் காரைக்கால் என்.ஐ.டியில் உதவி பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறார்.
- மகேஷ்குமார் இரவு 12 மணிக்கு மேல்தான் பஸ் வரும் என கூறினார்.
புதுச்சேரி:
காரைக்காலில் பஸ் ஏன் தாமதம் என கேட்ட உதவி பேராசிரியரை அடித்து, உதைத்த தனியார் பஸ் புக்கிங் அலுவல ஊழியர். காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம், மண்விலா பகுதியைச்சே ர்ந்த பிஜுகுமார் (வயது38). காரைக்கால் என்.ஐ.டியில் உதவி பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று கேரளா செல்லவேண்டி, காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில், ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்துள்ளார். இதனையடுத்து இரவு பஸ், 1 மணி நேரம் தாமதமாகும் என அவருடைய மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
இதுகுறித்து பிஜுகுமார் தனியார் பஸ் நிறுவன புக்கிங் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியிலி ருந்த ஊழியர் மகேஷ்குமார் இரவு 12 மணிக்கு மேல்தான் பஸ் வரும் என கூறினார். இந்த குறுஞ்செய்திக்கு பிஜுகுமார் விளக்கம் கேட்டார்.இதனால் ஆத்திர மடைந்த மகேஷ்குமார் பிஜுகுமாரை ஆபசமாக திட்டி, அருகில் கிடந்த இரும்பு பைப்பால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த பிஜுகுமார், காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் . மேலும் பிஜுகுமார் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ்குமாரை கைது செய்தனர்.