- பலத்த காற்று மழையால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
- பேனர் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் பகுதியில் நேற்று மாலையி லிருந்து நள்ளிரவு வரை திடீர் தொடர் மழையாக பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக சாலை ஓரங்களிலும் மழை நீர் தேங்கி காணப்படுகிறது.
மேலும் இடி மின்னல் இருந்து வந்ததால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக புதுக்குப்பம், பிள்ளையார்குப்பம் பகுதியில் பாதித்திருந்தது. பிறகு அவ்வப்போது மின் துறை ஊழியர்கள் சரி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
கிருமாம்பாக்கம் கடலூர்-புதுவை ரோட்டில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல கன்னிய கோவில், முள்ளோடை பகுதியிலும் இருந்தது. இது சம்பந்தமாக பொதுமக்கள் சார்பில் போலீசுக்கு, பலத்த காற்று மழையால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் விஜய குமார், உதவி சப் இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் நேற்று இரவு மற்றும் இன்று காலை வரை பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றி வருகின்றனர். பேனர் வைத்ததை அகற்றும் போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு காணப்பட்டது.
இந்த நிலையில் போலீ சார் பேனர் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.