நிலுவை சம்பளம் வழங்க கோரி பாசிக் ஊழியர்கள் முற்றுகை
- பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நிலுவை சம்பளம் முழுவதையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.
புதுச்சேரி:
பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் மாநில தலைவர் தினேஷ் பொன்னையா மாநில கவுரவ தலைவர் அபிஷேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, கோவிந்தராசு, மகேந்திரன், மணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குணசீலன், ராஜா,கண்ணம்மா, பாலமுருகன், ரஜினிகாந்த, ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிலுவை சம்பளம் முழுவதையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் மாதம்தோறும் சம்பளம் வழங்கிட வேண்டும்.தினக்கூலி ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.