காரைக்கால் 8 கோவில்களில் உண்டியல் எண்ணப்பட்டது
- அண்ணாமலை ஈஸ்வரர், கடைத்தெரு மகாமாரியம்மன் உள்ளிட்ட 8 கோவில்கள் இயங்கிவருகிறது.
- ஏதாவது ஒன்றில் இந்த தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களின் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம்.
புதுச்சேரி:
காரைக்கால் நகர் பகுதியில் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்திற்கு சொந்தமான காரைக்கால் அம்மையார், சித்தி விநாயகர், பொய்யாத மூர்த்தி விநாயகர், அண்ணாமலை ஈஸ்வரர், கடைத்தெரு மகாமாரியம்மன் உள்ளிட்ட 8 கோவில்கள் இயங்கிவருகிறது. ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை அல்லது உற்சவம் நடைபெற்று முடிந்த காலம் இவற்றில் ஏதாவது ஒன்றில் இந்த தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களின் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த மே மாதம் உண்டியல் எண்ணப்பட்டது.
தொடர்ந்து, அனைத்து கோவில்களின் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொள்வது என அறங்காவலர் குழு முடிவு செய்து, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து இதற்கான பணி ஆணை பெற்று, உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி தொடங்கியது. சுமார் 30 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றது. உண்டியலில் ரூ.8 லட்சத்து 55 ஆயிரத்து 130 இருந்தது, அத்தொகை உடனடியாக வங்கியில் செலுத்தப்பட்டதாக, கோவில் அறங்காவல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.