புதுச்சேரி

செங்கோலுக்கும் விடுதலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது- மார்க்சிஸ்டு கம்யூ. ராமகிருஷ்ணன்

Published On 2023-05-29 06:13 GMT   |   Update On 2023-05-29 06:13 GMT
  • புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்.
  • இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.

புதுச்சேரி:

புதுவை ரெட்டியார் பாளையம் அஜீஸ்நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு பின் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததற்கும் சாவார்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதற்கும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

செங்கோலுக்கும், விடுதலை அதிகார பரிமாற்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதில் பா.ஜனதா அரசியல் செய்கிறது.

புதுவையில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 6 சதவீதமும், காரைக்காலில் 8 சதவீதமும் குறைந்ததற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம். 6 முதல் 9-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகம் செய்துள்ளனர்.

இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை. சட்டசபையில் விவாதிக்கவில்லை. கட்டாய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

கியாஸ் மானியம் வழங்கவில்லை. பெண் குழந்தைகளுக்கு வைப்புத்தொகை நிதியும் அளிக்கவில்லை. அறிவித்த திட்டங்கள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை. எல்.டி.சி, யூ.டி.சி பணிகளை உடனே நிரப்ப வேண்டும்.

ரெஸ்டோபார்கள் திறப்பது சமூக சீரழிவை ஏற்படுத்துகிறது. இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News