சரக்கு கப்பல் போக்குவரத்தால் கடல் வழி வர்த்தகம் அதிகரிக்கும்
- தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஷ்பூ சுந்தருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- சென்னை -புதுவை இடையிலான கப்பல் போக்குவரத்துச் சேவையின் மூலமாக போக்குவரத்துச் செலவு குறைந்து கடல்வழி வர்த்தகம் அதிகரிக்கும்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஷ்பூ சுந்தருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மகளிர் நலன் காக்க அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.
பிரதமரின்" சாகர் மாலா" திட்டத்தின்கீழ் சென்னை -புதுவை இடையேயான சரக்குக் கப்பல் போக்குவரத்துச் சேவையை தொடங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி சர்பானந்தா சோனுவாலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை -புதுவை இடையிலான கப்பல் போக்குவரத்துச் சேவையின் மூலமாக போக்குவரத்துச் செலவு குறைந்து கடல்வழி வர்த்தகம் அதிகரிக்கும். மேலும், வருங்காலத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.