மின் கம்பங்களில் கேபிள் கட்டக்கூடாது-நகராட்சி எச்சரிக்கை
- உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட திண்டிவனம் சாலையில் ராஜிவ் சதுக்கம் - கோரிமேடு வரையில் சாலை சென்டர் மீடியினில் உள்ள மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள்கள் ஆங்காங்கே தொங்கி போக்கு வரத்துக்கு ஆபத்தாக இருந்தது.
- சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கேபிள்களை ஒழுங்குபடுத்தாததால், நகராட்சி ஊழியர்கள் தொங்கி கொண்டிருந்த கேபிள்களை துண்டித்து அப்புறபடுத்தினர்.
புதுச்சேரி:
உழவர்கரை ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட திண்டிவனம் சாலையில் ராஜிவ் சதுக்கம் - கோரிமேடு வரையில் சாலை சென்டர் மீடியினில் உள்ள மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள்கள் ஆங்காங்கே தொங்கி போக்கு வரத்துக்கு ஆபத்தாக இருந்தது.
இது குறித்த புகார்கள் உழவர்கரை நகராட்சிக்கு வந்ததை யொட்டி, கேபிள்களை ஒழுங்குப்படுத்த சம்பந்த பட்ட நிறுவனங்களுக்கு 2 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கேபிள்களை ஒழுங்குபடுத்தாததால், நகராட்சி ஊழியர்கள் தொங்கி கொண்டிருந்த கேபிள்களை துண்டித்து அப்புறபடுத்தினர்.
பொதுமக்களின் போக்குவரத்து நலனை யொட்டி, கேபிள்களை முக்கிய பிரதான சாலைகளின் சென்டர் மீடியன் மின் கம்பங்களில் ஆபத்தான முறையில் கட்டக் கூடாது. மீறினால் கேபிள்கள் தொடர்ந்து துண்டிக்கப்படுவதோடு, அபராதம் மற்றும் சம்பந்தபட்ட நிறுவனங்கள் மீது நகராட்சி சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.