அடிப்படை வசதியை பராமரிக்காத ரெஸ்டாரண்டுகள் உரிமம் ரத்து
- கலால்துறை எச்சரிக்கை
- வெளிநபர்களுக்கு மதுபானங்கள் சில்லறை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
புதுச்சேரி:
புதுவை கலால்துறை துணை ஆணையர் மேத்யூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
மது விற்பனை உரிமம் பெற்றவர்கள் தங்களது விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மதுபரிமாற அனு மதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநபர்களுக்கு மதுபானங்கள் சில்லறை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடிப்படை வசதிகளை சரிவர பராமரிக்காத ஒட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்ட ஒட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அடிப்படை வசதி களை சரி வர பராம ரிக்காத மற்றும் சில்லறை வியா பாரத்தில் ஈடுபடும் ஒட்டல்கள் மற்றும் ரெஸ்டா ரண்டுகள் மீது புதுவை கலால் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்ச ரிக்கை விடுக்கப்படுகிறது.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.