புதுச்சேரி

கோப்பு படம்.

சி.சி.டி.வி. கேமிராக்கள் இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல்

Published On 2023-06-28 06:24 GMT   |   Update On 2023-06-28 06:24 GMT
  • நகை வியாபாரியை தாக்கி ரூ.3½ லட்சம் பறிப்பு
  • ஒரு வீட்டை காட்டி அதை கட்டவே பணம் வேண்டும் என்றும் தன் அம்மா உள்ளே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் காளியம்மன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் பிரகாஷ் (வயது 26). பழைய மற்றும் அடகு வைத்த நகைகளை மீட்டு வாங்கி விற்று வியாபாரம் செய்து வருகிறார்.

செல்போனில் அழைப்புடந்த 24-ந் தேதி ஒரு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தன்னை ரகு என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கொம்பாக்கம் பகுதியில் நாங்கள் கட்டி வரும் வீட்டிற்கு பணம் தேவைப்படுவதால் எங்களிடம் உள்ள நகைகளை விற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து நேற்று முன் தினம் மதியம் விழுப்புரத்தில் இருந்து ரூ. 3,64,000 பணம் எடுத்து க்கொண்டு வந்துள்ளார்.

செல்போ னில் ரகுவை தொடர்பு கொண்டபோது கொம்பாக்கம் வாலிபால் மைதானம் அருகே வந்து கூப்பிடும்படி கூறினார்.

ஒதியம்பட்டு பகுதியில் ஒரு வெள்ளை கலர் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் அருகில் இறக்கத்தில் பாதி கட்டியிருந்த ஒரு வீட்டை காட்டி அதை கட்டவே பணம் வேண்டும் என்றும் தன் அம்மா உள்ளே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

உடனே பிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, உள்ளே சென்று நின்றவுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பாட்டிலால் பிரகாஷின் தலையில் அடித்துள்ளார்.

பிரகாஷ் திரும்பிப் பார்த்தபோது அந்த வீட்டில் மேலும் 2 பேரும் பக்கவாட்டில் இருந்து ஒருவரும் ஓடி வந்து அவரை தாக்கி பையையும், பிரகாஷின் போனையும் பிடுங்கி கொண்டு கருவேல காட்டிற்குள் தப்பி ஓடினர்.

பிரகாஷ் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் சரியான கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பிரகாஷின் செல்போனை அவர்கள் திருடிச்சென்றி ருப்பதால் அதன் சிக்னலை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கானும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News