புதுச்சேரி

கோப்பு படம்.

சந்திரபிரியங்காவின் குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-10-11 08:12 GMT   |   Update On 2023-10-11 08:12 GMT
  • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
  • பாலின ரீதியாகவும் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்த அந்த பண முதலை யார் என்பதை அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் விசாரணை செய்து கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில மக்கள் பாதுகாப்பு பேரியக்கத் தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்திருப்பது அவரது சொந்த விருப்பம் என்றாலும், ஆனால் அதற்காக அவர் கூறிய காரணங்களை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் கடுமை யான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

சாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் அவர் துன்பு றுக்கப்பட்டு ள்ளதாகவும் மேலும் பணத்திமிர் பிடித்தவர்களுக்கு எதிராக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறியிருப்பது மாநிலத்திற்கு பெரிய அவமானமாக உள்ளது. ஒரு பெண் அமைச்சருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உண்மையாக இருக்குமானால் அதற்கு இந்த அரசு முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும்.

மேலும் அவரது ராஜினாமாவை இது தொடர்பான விசாரணை முழு அளவில் முடிவு வரும் வரை இந்த அரசு ஏற்க கூடாது, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முழு அளவில் விசாரணை செய்து அவருக்கு சாதிய ரீதியாகவும் , பாலின ரீதியாகவும் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்த அந்த பண முதலை யார் என்பதை அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் விசாரணை செய்து கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

33 சதவீத பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்ட நிலையில் இருக்கின்ற ஒரு பெண் அமைச்சரை நீக்காமல் தொடர்ந்து பணியாற்ற அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.

Tags:    

Similar News