- புதுவை நகராட்சி ஆணையர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
- புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வர அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த வசதியாக நடைமுறையில் சில மாற்றங்களை அரசு மேற்கொண்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை கலெக்டர் தேர்தல் அதிகாரியாக தொடர்கிறார். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்து வந்த கலெக்டரின் சிறப்பு பணி அதிகாரி நீக்கப்பட்டு, துணை மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்து.
மற்ற 12 இ.ஆர்ஓ.,க்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சட்டசபை தேர்தலை பொறுத்தவரை சுற்றுலா, தொழில்துறை இயக்குனர்கள் கவனித்து வந்த சட்டசபை தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக உழவர்கரை, புதுவை நகராட்சி ஆணையர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
சில சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். உழவர்கரை நகராட்சி ஆணையர் காமராஜர் நகர், காலாப்பட்டு, லாஸ்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், புதுவை நகராட்சி கமிஷனர் முத்தியால்பேட்டை, ராஜ்பவன் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், வடக்கு துணை கலெக்டர் அரியாங்குப்பம், மணவெளி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திருத்தங்களுடன் கூடிய புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பட்டியல் விபரம் வருமாறு:-
வில்லியனூர் சப்-கலெக்டர்- மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு. நில அளவை துறை இயக்குனர்- மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கூட்டுறவு பதிவாளர்- கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி. உழவர்கரை நகராட்சி ஆணையர்- காமராஜர் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு.
புதுவை நகராட்சி ஆணையர்- முத்தி யால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம். துணை தொழிலளார் ஆணையர்- உருளை யன்பேட்டை, நெல்லித் தோப்பு, முதலியார்பேட்டை, வடக்கு துணை கலெக்டர் - அரியாங்குப் பம், மணவெளி. துணை போக்குவரத்து ஆணையர்- நெட்டப்பாக்கம், ஏம்பலம், பாகூர்.
காரைக்கால் துணை குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரி- நெடுங்காடு, திருநள்ளாறு. காரைக்கால் துணை கலெக்டர்- காரைக்கால் வடக்கு, தெற்கு, நிரவி, டிஆர்.பட்டினம்.
மாகி நிர்வாக அதிகாரி- மாகி, ஏனாம் நிர்வாகி- ஏனாம்.