புதுச்சேரி

விழாவில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பா.ஜனதா தலைவர் செல்வகணபதி வழங்கிய காட்சி.

null

முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பை அரசாணையாக வெளியிட வேண்டும்

Published On 2023-11-27 08:43 GMT   |   Update On 2023-11-27 08:43 GMT
  • பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி. கோரிக்கை
  • மகளிர் அணி தலைவி சாந்தி மற்றும் நிர்வாகிகள் மனோ, கணேசன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

பா.ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டதினம் கொண்டாப் பட்டது. அரியாங்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வரவேற்றார். பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான அருள் ஆகியோர் அரசியலமைப்பு சட்டத்தின் மக்கள் தேவை கள் பற்றியும் அதை பயன்படுத்தும் முறை பற்றியும் பேசினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. பேசியதாவது:-

டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த, மறைந்த 5 இடங்கள் பஞ்ச தீர்த்த ஸ்தலங்கலாக அறிவித்து மிகப்பெரிய அளவில் புனரமைக்கப்பட்டு மக்களுக்கு அவருடைய வரலாறுகளை தெரிவிக்கும் வகையில் அமைத்துள்ளனர். இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறுகையில், அம்பேத்கர் வாழ்ந்த இடங்களுக்கு மக்கள் சென்று பார்வை யிட்டு வருவதற்காக அரசு செலவிலேயே நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதற்காக அவருக்கு பா. ஜனதா கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இதற்கான அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதி மோகன், விவசாய அணி தலைவர் புகழேந்தி, பட்டியல் அணியின் மூத்த துணை தலைவர்கள் கஜேந்திரன், சுப்பிரமணி பொதுச்செய லாளர் நாகராஜ், பொருளா ளர் டாக்டர் சிவபெருமான் மாநில செயலாளர் பிரகாஷ், அய்யப்பன் அருண், செயற்குழு உறுப்பி னர்கள் காமாட்சி, தட்சிணா மூர்த்தி ராஜாராம், நகர் மாவட்ட தலைவர் வெற்றிவேல், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜ குரு அம்பேத்கர், வில்லியனூர் மாவட்ட தலைவர் விண்ண ரசன் சமூக வலைதள பிரிவு பொறுப்பாளர் அருள் குமார், அரியாங்குப்பம் தொகுதி பொறுப்பாளர் வசந்த் ராஜ், பொதுச் செயலாளர்கள் பிச்சமுத்து, முருகவேல் மாவட்ட மகளிர் அணி தலைவி சாந்தி மற்றும் நிர்வாகிகள் மனோ, கணேசன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அரசியலமைப்பு சட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News