புதுச்சேரி

கோப்பு படம்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி நாளை டெல்லி பயணம்

Published On 2023-07-17 09:04 GMT   |   Update On 2023-07-17 09:04 GMT
  • புதுவையில் தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு தலைமை வகிக்கும் என்ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • என்ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்- அமைச்சருமான ரங்கசாமி இந்த கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

புதுச்சேரி:

அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மத்திய பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே பாட்னாவில் எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் நடந்தது. பெங்களூருவில் 2-வது கூட்டம்  நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம்  டெல்லியில் நடக்கிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., லோக்ஜனசக்தி, ஷிண்டே தலைமையிலான சிவசேனா, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு கட்சியின் தலைவர் நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோல புதுவையில் தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு தலைமை வகிக்கும் என்ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

என்ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்- அமைச்சருமான ரங்கசாமி இந்த கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நாளை  டெல்லி செல்கிறார். நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் புதுவை திரும்பு கிறார்.

முதல்-அமைச்சர் ரங்கசாமியை பொறுத்த வரை விமானத்தில் ஏறும்வரை அவரின் பயணத்தை உறுதிசெய்ய முடியாது. இருப்பினும் முதல்- அமைச்சர் அலு வலக வட்டாரங்கள் அவர் நாளை டெல்லிசெல்ல உள்ளதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News