புதுச்சேரி

அக்கார்டு ஒட்டலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்று 300 கிலோ எடையில் கேக் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்ட ஊழியர்கள்.

கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

Published On 2022-10-30 05:48 GMT   |   Update On 2022-10-30 05:48 GMT
  • புதுவை அக்கார்டு ஒட்டல் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்கப்படும்.
  • 45 நாட்கள் ஊறவைக்கப்பட்டு கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டிற்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை அக்கார்டு ஒட்டல் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்கப்படும்.

இந்த ஆண்டு கிறிஸ்மஸ், புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய முறையில் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது. பழ வகைகளை மதுபானங்களில் ஊற்றி ஊறல் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

100 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இதனுடன் 25 லிட்டர் மதுபானங்களும் கலந்து ஊற வைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வடன் பங்கேற்றனர்.

45 நாட்கள் ஊறவைக்கப்பட்டு கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டிற்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News