கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி-உணவு திருவிழா
- பிம்ஸ் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறுகிறது.
- 25- க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்களில் பல்வேறு விதமாக உணவுகளை தயாரித்திருந்தனர்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறுகிறது.
மருத்துவ மாணவ-மாணவிகள் பங்கேற்ற உணவு திருவிழா மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு விழாவுக்கு பிம்ஸ் முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் மெட்ராஸ் மறை மாவட்ட மலங்கரா ஆர்தோடக்ஸ் சர்ச் பேராயர் ஜீவர்கீஸ் மார் பிலாக்செனோஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.
பின்னர் மருத்துவ மாணவர்களின் ஆராதனை பாடல் இயேசு கிறிஸ்து குறுநாடகம் நடைபெற்றது. குறிப்பாக மருத்துவ மற்றும் செவிலியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களின் உணவு திருவிழா அனைவரையும் கவர்ந்தது.
25- க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்களில் பல்வேறு விதமாக உணவுகளை தயாரித்திருந்தனர். இதன் மூலம் கிடைத்த நிதியினை தொண்டு இல்லங்களுக்கு உதவுவதாக கல்லூரி துணை முதல்வர் மேகி முருகன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பிம்ஸ் அருட் தந்தை ஜோபி ஜார்ஜ், துணை முதல்வர் டாக்டர் சுனில் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.