புதுச்சேரி

செல்வகணபதி எம்.பி. துாய்மை பணியை தொடங்கி வைத்த காட்சி.

மோடி பிறந்த நாளையொட்டி துாய்மை பணி

Published On 2022-09-18 03:39 GMT   |   Update On 2022-09-18 03:39 GMT
  • காரைக்காலில் துாய்மை பணி,ரத்த தான முகாமை செல்வகணபதி எம்.பி.,தொடங்கி வைத்தார்.
  • காரைக்கால் கடற்கரை மற்றும் கிளிஞ்சல் மேடு கடற்கரை பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

புதுச்சேரி:

காரைக்காலில் துாய்மை பணி,ரத்த தான முகாமை செல்வகணபதி எம்.பி.,தொடங்கி வைத்தார்.

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம்,தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், புவி அறிவியல் அமைச்சகம்,இந்திய கடலோர காவல் படை சார்பில் காரைக்காலில் கடற்கரை துாய்மை பணி நடந்தது.

செல்வகணபதி எம்.பி.,சிறப்புரையாற்றி கடற்கரை துாய்மை பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து காரைக்கால் கடற்கரை மற்றும் கிளிஞ்சல் மேடு கடற்கரை பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.காரைக்கால் மாவட்ட நிர்வாகம், கடலோர காவல் படை, என்.சி.சி.,மற்றும் என்.எஸ்.எஸ்.,மாணவர்கள், காரைக்கால் நகராட்சி நிர்வாகம், காவல்துறை, ஓ.என்.ஜி.சி., தன்னார்வலர்கள் கடற்கரையில் பரவி கிடந்த குப்பை,பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.துாய்மை பணியில் மீனவ பஞ்சாயத்தார்கள், மீனவர்கள் கலந்து கொண்டு,குப்பைகளை சேகரித்தனர்.

நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், கடலோர காவல்படை கமாண்டன்ட் விவேகானந்தன், பேரிடர் மேலாண்மை துணை கலெக்டர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தன்னார்வல ரத்த தான முகாம் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் நடந்தது.காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவமனை மற்றும் பா.ஜனதா சார்பில் நடந்த ரத்த தான முகாமை செல்வகணபதி எம்.பி.,தொடங்கி வைத்தார்.மருத்துவமனை டாக்டர்கள்,செவிலியர்கள், பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News