சாலையை சீரமைக்க கோரி கம்யூனிஸ்டு கட்சி நூதன பேனர்
- இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி தவறி விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
- புதுவை அரசே மக்களைக் கொல்லும் மரண கால்வாயை உடனே சீராக்கு என வாசகங்கள் எழுதிய பேனரும் வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் கடைவீதி, வணிகர் வீதி சந்திப்பில் கழிவு நீர் கால்வாயின் மேல் இரும்பு கம்பியால் ஆன சிலாப் புதுவை அரசின் பொதுப் பணித்துறை சார்பில் போடப் பட்டுள்ளது.
அந்த இரும்பு சிலாப்கள் பழுதடைந்து உள்வாங்கிய தால் அந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த இரும்பு சிலாப்பை சரி செய்யாததால் கடைவீதியில் உள்ள மெகா பள்ளத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி தவறி விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
திருக்கனூரில் இருந்து மதகடிப்பட்டுக்கு செல்லக் கூடிய முக்கிய வழியாகவும் இந்த இடம் இருப்பதால் பஸ்கள், லாரிகளும் அடிக்கடி இந்த பள்ளத்தில் சிக்கி கொள்வதால் கடைவீதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியா மல் இரு சக்கர வாகனங்க ளில் வருவோர் தவறி விழுந்தால் உயிர்பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை சரி செய்யக்கோரி பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் பொதுப்பணி துறை சார்பில் இதுவரை நடவடிக்கை யும் எடுக்கப்ப டவில்லை.
கடை வியாபா ரிகளும் இரும்பு சிலாப்பை சரி செய்து சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை யும் விடுத்தனர்.
இந்நிலையில் கடைவீதி யில் ஏற்பட்டுள்ள பள்ளத்தினை சரி செய்ய வேண்டும் என்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் அபாய நிலையில் உள்ள பள்ளத்தில் கட்சி கொடி யினை நட்டு, புதுவை அரசே மக்களைக் கொல்லும் மரண கால்வாயை உடனே சீராக்கு என வாசகங்கள் எழுதிய பேனரும் வைத்துள்ளனர்.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் பள்ளத்தில் கொடி நட்டு பேனர் வைத்துள்ளதை பார்த்து இனியாவது பொதுப்பணி த்துறை இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.