புதுச்சேரி

பாதாள சாக்கடை அமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

பாதாள சாக்கடை அமைக்கும் பணி

Published On 2023-01-06 09:34 GMT   |   Update On 2023-01-06 09:34 GMT
  • லேசார் கோவில் வீதியில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.
  • அனிபால் கென்னடியை சந்தித்து பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 3, அகத்தியர் நகர் விரிவாக்கம், திருவள்ளுவர் வீதி, மற்றும் திப்புராயப்பேட்டையில் உள்ள லேசார் கோவில் வீதியில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியை சந்தித்து பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பொதுப்ப ணித்துறை தலைமை பொறியாளர் சத்திய மூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர் முருகா னந்தம் உள்ளிட்டோரிடம் பாதாள சாக்கடை அமைத்து தர கோரி கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

அதன் பேரில் தற்போது அப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

அப்போது தொகுதி செயலாளர் சக்தி வேல், அவைத்தலைவர் ரவி, ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர்கள் மணிகண்டன், செல்வம், காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News