உப்பனாறு வாய்க்காலில் முதலை?-பொதுமக்கள் பீதி-அலறியடித்து ஓட்டம்
- பாலத்துக்கு அடியில் முதலை இருப்பதாக ஒரு படம் சமூகவலை தளங்களில் பகிரப்பட்டது.
- கனமழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படு கிறது.
புதுச்சேரி:
புதுவை உப்பனாறு வாய்க்கால் நகரின் முக்கிய பகுதிகளை இணைத்து சென்று உப்பளம் அருகே கடலில் கலக்கிறது.
இந்த உப்பனாறு வாய்க்காலின் மீது பாலம் அமைத்தால் போக்கு வரத்து நெரிச லுக்கு தீர்வாக இருக்கும் என அரசு முடிவு செய்தது.
காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் உப்பனாற்றின் மேல் பாலம் அமைக்க 2008-ல் அரசு திட்ட மிட்டது.
இந்த வாய்க்கால் ஜீவா நகர் பகுதியில் தொடங்கி வாணரப் பேட்டை, வம்பா கீரப்பாளையம் வழியாக கடலுக்கு செல்கிறது. பாலம் அமைக்கும் பணி இதுவரை முழுமைய டைய வில்லை.
இந்த வாய்க்காலில் காமராஜர் சாலை பகுதி யில் பாலம் கட்டுமான பணி பாதியில் நிற்கிறது.
இந்த நிலையில் இன்று காலை காமராஜர் சாலை உப்பனார் கால்வாயை ஒட்டியுள்ள பர்னிச்சர் கடை ஊழியர் ஏழுமலை குப்பை கொட்ட சென்றார். அப்போது வாய்க்காலில் ஒரு முதலை இருப்பதை கண்டார்.
சுமார் 4 அடி நீளம் இருந்த முதலை வாய்க்காலில் கழிவுநீரில் சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து அவர் கடையில் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக இத்தகவல் அடுத்தடுத்த கடைக்காரர்க ளிடம் பரவியது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடியது.
இந்த நிலையில் ஆள் அரவம் கேட்ட முதலை பாலத்தின் அடியில் சென்று விட்டது. இருப்பினும் முதலையை காண பொது மக்கள் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி பாலத்தில் நிற்க தொடங்கி னர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து பொது மக்களை அங்கிருந்து அகற்றினர். சிலர் முதலை பீதியில் ஓட்டம் பிடித்தனர்.
வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் கால்வாயில் இறங்கி முதலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பாலத்துக்கு அடியில் முதலை இருப்பதாக ஒரு படம் சமூகவலை தளங்களில் பகிரப்பட்டது. உப்பனாறு வாய்க்காலில் முதலை என்ற தலைப்பில் அந்த படம் வைரலாக பரவியது.
இதனால்தான் அப்பகுதியில் கூட்டம் கூடியது. முதலையை முதலில் பார்த்தவரை தவிர மற்றவர்கள் யாரும் பார்க்கவில்லை. இருப்பி னும் வனத்துறையினர் முதலையை பிடிப்பதற்காக தேடி வருகின்றனர்.
கனமழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இவ்வாறு எங்காவது அணைக்கட்டு பகுதியி லிருந்து இந்த முதலை வந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.