புதுச்சேரி

சேதமான ஏ.எப்.டி. மைதான மதில் சுவரை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.

சேதமான ஏ.எப்.டி. மைதான மதில் சுவரை சீரமைக்க வேண்டும்

Published On 2023-08-22 05:58 GMT   |   Update On 2023-08-22 05:58 GMT
மதில் சுவர் பல ஆண்டுகளாக சேதமடைந்து ஆங் காங்கே விரிசல் விட்டு உடைந்த நிலையில் இருந்தது.

புதுச்சேரி:

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ரோடியார்பேட்டில் உள்ள ஏ.எப்.டி. மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மதில் சுவர் பல ஆண்டுகளாக சேதமடைந்து ஆங் காங்கே விரிசல் விட்டு உடைந்த நிலையில் இருந்தது.

இதனை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென் னடியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை பார்வையிட்ட எம்.எல்.ஏ., உடனே பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திற் கும், நகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கும் சென்று கோரிக்கை வைத்தார். பின்னர் அதிகாரிகளை அழைத்து ஏ.எப்.டி மைதானத்தை ஆய்வு மேற்கொண் டார்.

அப்போது சுற்றுமதில் சுவர்களை சீரமைத்து பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக கட்டிதர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து மதில் சுவரை விரைவில் சீர மைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர், ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சாம்பசிவம், தி.மு.க. அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் செயலாளர் ராஜி, மாணவர் அணி நிசார், மீனவர் அணி விநாயகம், கிளை செயலாளர்கள் ஆறுமுகம், மாயவன், ராகேஷ், நிர்வாகிகள் ரகுராமன், பஸ்கள், மரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News