null
சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
- போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- பைபாஸ் சாலையில் வழக்கமாக அதிவேகமாக செல்லும் வாகனங்கள் சாலையில் குறுக்கே செல்லும் கால்நடைகளின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதுவதால் விபத்து ஏற்பட்டு உயிர்கள் பலியாகி வருகிறது.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில், கிளியனூர், கோட்டக்குப்பம், மரக்காணம் ஆகிய போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் பைபாஸ் சாலை மற்றும் ஈ.சி.ஆர். சாலை உள்ளது.
இந்த சாலைகளில் விபத்து நடைபெறாத நாட்களே இல்லை என கூறலாம். ஏதாவது ஒரு வகையில் புதுவை- திண்டி வனம் பைபாஸ் சாலை யிலும் புதுவை-சென்னை ஈ.சி.ஆர் சாலையிலும் விபத்து நடந்த வண்ணம் உள்ளது.
புதுவையில் இருந்து திண்டிவனம் வரை உள்ள பைபாஸ் சாலை கிராமப் பகுதியை ஒட்டி செல்வதால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பைபாஸ் சாலைகளில் நடமாடுகிறது.
பைபாஸ் சாலையில் வழக்கமாக அதிவேகமாக செல்லும் வாகனங்கள் சாலையில் குறுக்கே செல்லும் கால்நடைகளின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதுவதால் விபத்து ஏற்பட்டு உயிர்கள் பலியாகி வருகிறது.
இதே போல் ஈ.சி.ஆர். சாலையிலும் கோட்டக் குப்பம், பெரியமுடியார் சாவடி, கீழ்புத்துப் பட்டு, அனுமந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் சாலையின் குறுக்கே செல்லும் நாய் மற்றும் மாடுகளால் தொடர் விபத்து ஏற்படுகிறது.
மொரட்டாண்டி யில் உள்ள டோல்கேட் நிர்வாகம் வாகன கட்ட ணங்களை வசூல் செய்து புதுவை இந்திரா காந்தி சதுக்கம் முதல் திண்டிவனம் பஸ் நிலையம் வரை சாலையை பராமரித்து வருகிறது. பைபாஸ் சாலையில் சுற்றி திரியும் கால்நடை களால் ஏற்படும் விபத்து குறித்து ஆங்காங்கே வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பலகை வைத்திருக்கும் டோல்கேட் நிர்வாகம் கால்நடை களை சாலை களில் உலாவ விடும் மாட்டின் உரிமையா ளர்கள் மீது எந்த நடவ டிக்கை யும் எடுக்க அஞ்சுகின்ற னர்.
மொர ட்டாண்டி, பட்டா னூர், திருச்சிற்றம்ப லம் கூட்ரோடு பகுதிகளில் நூற்றுக்க ணக்கான மாடுகள் சாலைகளில் படுத்து கிடப்ப தால் வெளியூரி லிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இது தெரியாமல் அவற்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது.
திருச்சிற்ற ம்பலம் ஊராட்சிக்கு ட்பட்ட, திருச்சிற்ற ம்பலம் கூட்ரோடு பட்டானூர் நாவற்குளம், மொரட்டா ண்டி ஆகிய பகுதிகளில் உள்ள பைபாஸ் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிரத்யேக மாட்டு பட்டி உருவாக்கப்ப ட்டு ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் மாடுகளை அங்கு அடைத்து வைத்தனர்.
மாடுகளை காணவில்லை என பட்டிக்கு வரும் மாட்டின் உரிமையாளர்க ளுக்கு ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் கடும் எச்சரிக்கை கொடுத்து மாடு களை திரும்ப கொடுத்து வருகின்றனர். ஆனால் பைபாஸ் சாலையில் விபத்து ஏற்பட்டால் டோல்கேட் நிர்வாகம் தங்களது ஆம்புலன்ஸ் சேவையை மட்டும் செய்து கொடுக்கிறது. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை டோல்கேட் நிர்வாகம் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நிரந்தர தீர்வாகும் என பொதுமக்கள் கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, புதுவை திண்டிவனம் பைபாஸ் சாலையில் எங்காவது ஓரிடத்தில் விபத்து நடந்தால் அந்த இடத்தில் மட்டும் போலீசார் பேரிக்காடுகளை அமைத்து மெதுவாக செல்லவும் என்ற எச்சரிக்கை வாசகத்தோடு தங்களது கடமையை முடித்து விடுகின்றனர். விபத்துக்கு காரணமாக அமையும் கால்நடைகளை யும் பைபாஸ் சாலையில் உலா வரும் கால்நடைகளின் நடமாட்டத்தை தடுப்பதற்கும் அதன் உரிமையாளர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளாததால் இது போன்ற தொடர் விபத்து க்கள் ஏற்பட்டு உயிர்கள் பலியாகி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் புதுவை-திண்டிவனம் சாலையில் ஏற்பட்ட விப த்தில் 60-க்கும் மேற்பட் டோர் பலியாகி உள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் கை கால்களை இழந்துள்ளனர்.
எனவே காவல்துறை விபத்து வழக்குகளை மற்றும் பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சாலை பாதுகாப்பு வார விழாவில் பங்கேற்ப தோடு சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை மதிப்பில்லாத மனித உயிர் பலிகளை தடுக்க காவல் துறை முன்வர வேண்டு மென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.