தமிழ்வளர்ச்சி துறையை அறிவிக்க வேண்டும்-சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்
- புதுவையில் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
- மக்கள் நலன் கருதி பல்வேறு புதியத்துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர் பேரவை சங்க தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். புதுவையில் அரசு தமிழ்ச்சிறகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளதை ஏற்க இயலாது. புதுவை மாநிலத்தில் கடந்த பல வருடங்களாக தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கப்பட வேண்டும் எனத் தமிழறிஞர்கள் போராடிவருகின்றனர்.
புதுவையில் சமூக நலத்துறை உட்பட பல துறைகள், மக்கள் நலன் கருதி பல்வேறு புதியத்துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதுபோல கலை பண்பாட்டுத்துறையிலிருந்து புதியதாக தமிழ்வளர்ச்சித்துறை உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்தி புதுவை சிந்தனையாளர்கள் பேரவை மற்ற அமைப்புகளுடன் இணைந்து, முதல்-அமைச்சரிடம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனு அளித்தோம்.
முதல்-அமைச்சர் இதனை மறுபரிசீலனை செய்து புதுவை அரசின் தமிழ்வளர்ச்சித்துறையை உடனே அறிவிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.