ரூ.1 கோடிக்கு வளர்ச்சி திட்ட பணிகள்
- புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு கண்ணகி பள்ளி தெற்கு பகுதியில் விழுப்புரம் சாலையில், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பகுதி சார்பில் ரூ.45 லட்சம் செலவில் யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.
- வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் ரங்கமன்னார், கோட்டைமேடு பகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சங்கர், தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு கண்ணகி பள்ளி தெற்கு பகுதியில் விழுப்புரம் சாலையில், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பகுதி சார்பில் ரூ.45 லட்சம் செலவில் யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.
அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜ், உதவி பொறியாளர்கள் பாவாடை, சீனிவாசன், இளநிலை பொறியாளர் சித்தார்த்தன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் ரங்கமன்னார், கோட்டைமேடு பகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சங்கர், தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், கண்ணகி அரசு பள்ளியின் நுழைவு வாயிலில் இரும்பு கதவு, விழுந்த மதில்சுவர்களை புதிதாக கட்டுவதற்கும், பள்ளி வளாக சாலைகள் பராமரிப்பு பணிக்கும் ரூ.25 லட்சம் மதிப்பில் பணிகளையும், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உறுவையாறு பாலாத்தின் ஷட்டர் அமைப்புகளை புதியதாக மாற்றுவதற்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான பணிகளையும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.