வில்லியனூரில் தீபாவளி அங்காடி-கிராம சந்தை
- எதிர்க்கட்சி தலைவர் சிவா திறந்து வைத்தார்
- தீபாவளி சிறப்பு அங்காடி மற்றும் கிராம சந்தை வில்லியனூர் ஆனந்த ராஜா திருமண நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
புதுச்சேரி:
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் கிராமப்புற மகளிர் மேம்பாட்டிற்காக, புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது.
சுயஉதவி குழுவினரின் பொருளாதார மேம் பாட்டுக்கும், சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் நுகர்வோரிடம் நேரடியாக விற்கப்பட்டு வருகிறது. வில்லியனூர் வட்டார வளர்ச்சி முகமை மூலம் கடந்த ஆண்டு தீபாவளி அங்காடி மற்றும் கிராம சந்தை 3 நாட்கள் நடத்தப்பட்டு ரூ.9.5 லட்சம் வசூல் ஈட்டியது.
இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பு அங்காடி மற்றும் கிராம சந்தை வில்லியனூர் ஆனந்த ராஜா திருமண நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தீபாவளி சிறப்பு அங்காடி மற்றும் கிராம சந்தையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.63 லட்சம் கடன் உதவிக்கான காசோலையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயலர் நெடுஞ்செழியன், திட்ட இயக்குநர் சத்தியமூர்த்தி, திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாக், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி மற்றும் விரிவாக்க அதிகாரிகள், கிராம சேவக்குக்கள், சேவக்குகள்,
வில்லியனூர் வட்டார அளவிலான கூட்டமைப்பின் பொறுப்பா ளர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், அயலக அணி துணை அமைப்பாளர் பக்ருதீன், முன்னாள் தொகுதி துணைச் செயலாளர் அங்காளன், ராஜி, திலகர், சரவணன், சுரேஷ், பரதன், நடராஜன், யோகானந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.