தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
- தொகுதி தலைவர் கே.பி. சண்முகம் தலைமையில் நடந்தது
- தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் தமிழகத்தின் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வானூர் ஒன்றிய தலைவர் கே.பி. சண்முகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.கே. ராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் ராமச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் நிர்வாகிகள் சிவலிங்கம் ஆதிமுத்து லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு வழங்க உள்ள பெண்களுக்கான உரிமை தொகையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஆளும் அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
கஞ்சா கள்ளச்சாராய, விற்பனையை அரசு தடுக்க வேண்டும். தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
னதா நிர்வாகிகள் ஜீவா, குப்புசாமி, அய்யனார், மேகநாதன் ரமேஷ், கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.