புதுச்சேரி

பொதுகூட்டத்தில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.

ஒட்டுவங்கி அரசியலுக்காக திட்டமிட்டு மத துவேசத்தை தி.மு.க. பரப்புகிறது

Published On 2023-09-16 07:21 GMT   |   Update On 2023-09-16 07:21 GMT
  • அன்பழகன் தாக்கு
  • இந்து மதத்தை அவமானப்படுத்தி பேசுவது தி.மு.க.வினரின் வழக்கமாகும். ஓட்டு வங்கிக்காக திட்டமிட்டு மத துவேசத்தை மக்களிடம் தி.மு.க கொண்டு செல்கிறது.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடந்தது.

அ.தி.மு.க. அவை தலைவர் அன்பானந்தம் தலைமை தாங்கினார். உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் கோபால், பொதுக்குழு உறுப்பினர் நாக.லோகநாதன், முன்னாள் தொகுதி தலைவர் துரைசாமி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகுமாறன், புதுவை மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் 500-க்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு புடவை வழங்கினர்.

தொடர்ந்து மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

ஆட்சியில் இருந்த போதுதான் சாராத எந்த மதத்தையும் புன்படுத்தும் கருத்துக்களை உயிர் மூச்சு உள்ளவரை பேசாதவர்கள் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. அவர்கள் வழியை பின்பற்றுவர் எடப்பாடி பழனிசாமி.

பிற மதம் சுப நிகழ்ச்சிகளில் இந்து மதத்தை அவமானப்படுத்தி பேசுவது தி.மு.க.வினரின் வழக்கமாகும். ஓட்டு வங்கிக்காக திட்டமிட்டு மத துவேசத்தை மக்களிடம் தி.மு.க கொண்டு செல்கிறது.

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக சேவை செய்யும் ஒரு மாபெரும் இயக்கம் அ.தி.மு.க.

புதுவையில் செயல்படுத்தப்படும் பல்வேறு நல்ல திட்டங்களுக்கு கோரிக்கை வைப்பதும், அதனை செயல்படுத்த போராட்டம் நடத்துவதும் அ.தி.மு.க. மட்டுமே. இதனை மக்கள் நன்கு உணர வேண்டும்.2024-ல் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் மகத்தான வெற்றியை பெறும். எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியலில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக வர இருக்கிறார். அதற்கு புதுவை தொகுதி தேர்தல் வெற்றி அவசியமானது.

இவ்வாறு அன்பழகன் பேசினார்.

கூட்டத்தில் மாநில ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர், துணைத் தலைவர் ராஜாராமன், இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், மகாதேவி, ஆர்.வி.திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச் செயலாளர்கள் உமா, குணசேகரன், எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, வி.கே.மூர்த்தி, காந்தி, உழவர்கரை நகர செயலாளர் எஸ்.எஸ்.சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன் ,, மேற்கு மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உருளையன்பேட்டை தொகுதி அவைத் தலைவர் ராஜா நன்றி கூறினார்.

Tags:    

Similar News