தி.மு.க. இளைஞரணி இருசக்கர வாகன பேரணி எதிர்கட்சித்தலைவர் சிவா வரவேற்பு
- உப்பளம், உருளையன்பேட்டை, ராஜ்பவன், முத்தியால் பேட்டை, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், கோரிமேடு வழியாக திண்டிவனம் சென்றது.
- இளைஞரணி துணை அமைப்பாளர் உத்தமன் ஆகியோர் தலைமையிலும், கோரிமேடு எல்லையில் தொகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
மாநில உரிமை மீட்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 15-ந் தேதி கன்னியாகுமரியில் தி.மு.க இளைஞர் அணி இருசக்கர வாகன பிரச்சார பேரணியை தொடங்கியது.
பேரணி புதுவை மாநில எல்லையான மதகடிப்பட்டுக்கு வந்தது. அங்கு எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான சிவா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி யில் அவைத்தலைவர்
எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, செந்தில்குமார், சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், செந்தில்வேலன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் புதுவையில் வாகன பேரணி வில்லியனூர், மங்கலம், அரியாங்குப்பம், முதலியார் பேட்டை, உழவர்கரை, நெல்லித்தோப்பு, உப்பளம், உருளையன்பேட்டை, ராஜ்பவன், முத்தியால் பேட்டை, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், கோரிமேடு வழியாக திண்டிவனம் சென்றது.
பேரணியில் இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர்கள் டாக்டர் நித்திஷ், தமிழ்பிரியன் ஆகியோர் தலைமையில் மரப்பாலம் சந்திப்பிலும், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், தொகுதி செயலாளர்கள் சவுரிராஜன், சிவக்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் உத்தமன் ஆகியோர் தலைமையிலும், கோரிமேடு எல்லையில் தொகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.