புதுச்சேரி

வாய்க்கால் சீரமைப்பு பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்த காட்சி.

ரூ.48 லட்சம் செலவில் வாய்க்கால் சீரமைப்பு பணி

Published On 2023-05-24 08:17 GMT   |   Update On 2023-05-24 08:17 GMT
  • பழுதடைந்த கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்தல் மற்றும் மறுகட்டுமானம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.
  • இதனை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

மங்கலம் தொகுதி பங்கூர்பேட் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.48 லட்சத்து 30 ஆயிரம் செலவில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து பங்கூர் கிராமம் வரை 640 மீ நீளம் உள்ள பழுதடைந்த கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்தல் மற்றும் மறுகட்டுமானம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. இதனை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் தனசேகரன், இளநிலை பொறியாளர் ஜலீல், ஒப்பந்ததாரர் சிவி கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News