- திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம் செல்லங்கால் வடிகால் வாய்க்காலில் செடி கொடிகள் முட்புதர்கள் அடைத்து மழைநீர் வடிகால் வாய்க்காலில் செல்லாமல் ஒரே பகுதியில் தேங்கி நின்றது.
- இதில் அங்காளன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம் செல்லங்கால் வடிகால் வாய்க்காலில் செடி கொடிகள் முட்புதர்கள் அடைத்து மழைநீர் வடிகால் வாய்க்காலில் செல்லாமல் ஒரே பகுதியில் தேங்கி நின்றது.
இது குறித்து பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து புதுவை பொதுப்பணி த்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் 15 லட்சத்து 7ஆயிரம்நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான தொடக்க பணி நடைபெற்றது.
இதில் அங்காளன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த வடிகால் வாய்க்காலுக்கு மறுபுறத்தில் கலித் தீர்த்தாள் குப்பம் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட அய்யனாரப்பன் கோவிலுக்கு பாதை இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு செல்வதற்கு மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் உள்ள பகுதியை கடந்து மறுக்கரை பகுதிக்கு சென்று சாமியை வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் கோயிலுக்கு செல்வதற்கு ஓடை பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு நேரில் சென்று பாலம் கட்டுவதற்கான ஆய்வு மேற்கொண்டார் நிகழ்ச்சியில் புதுவை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சேகர் , இளநிலை பொறியாளர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.