ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்க வேண்டும்-ஓம்சக்தி சேகர் அறிவுறுத்தல்
- புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
- ஒரு கட்சியின் தலைவராகவும், மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியாகவும் உள்ள முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், பெற்ற பதவியை கொண்டு பொதுமக்களுக்கும் தனது தொகுதி மக்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை அரசிடமும், அரசு அதிகாரி களிடமும் போராடி, வாதாடி நியாயமான முறையிலே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும். இதை விடுத்து மிரட்டல் விடுப்பது, கொச்சை வார்த்தைகளை பயன்படுத்துவது, கலவரங்களை ஏற்படுத்து வது போன்று பேசுவது போன்ற செயல்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளின் மாண்புக்கு நல்லதல்ல.
முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. தேவையில்லாத கருத்துக்களை கூறுவதும் ஒரு மாநிலத்தில் 4 முறை முதல் -அமைச்சராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும், மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியாகவும் உள்ள முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று.
எனவே ஏனாம் சுயேட்சை எம்.எல்ஏ. தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும். முதல்-
அ மைச்சரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.