புதுச்சேரி

தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற குதிரை வீரர்கள்.

தடை தாண்டும் பிரிவில் பங்கேற்ற குதிரை வீரர்கள்

Published On 2023-03-18 08:14 GMT   |   Update On 2023-03-18 08:14 GMT
  • புதுவையை அடுத்த ஆரோவில்லில் இயங்கும் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி ஆண்டுதோறும் குதிரையேற்ற போட்டியை நடத்தி வருகிறது.
  • 3-வது நாளான அட்வான்ஸ் டிரஸ்ஏஜ் ஒருங்கிணைப்பு பிரிவில் வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

புதுவையை அடுத்த ஆரோவில்லில் இயங்கும் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி ஆண்டுதோறும் குதிரையேற்ற போட்டியை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு 23-வது தேசிய அளவிலான குதிரை ஏற்ற போட்டி 16-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கின்றது. போட்டியில் சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கோயம்புத்தூர், ஐதராபாத் மற்றும் உதகை உட்பட நாடு முழுவதும் இருந்தும் 140 பயிற்சி பெற்ற குதிரைகள் மற்றும் 150 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளில் குதிரை அணிவகுப்பு மற்றும் உடல் ஆரோக்கிய பிரிவில் குதிரைகளும் வீரர்களும் பங்கேற்றனர். 2-வது நாளில் டிரஸ்சேஜ் எனப்படும் குதிரை மற்றும் வீரர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு போட்டியும் சிறுவர்களுக்கான தடை தாண்டும் போட்டியும் நடத்தப்பட்டது.

3-வது நாளான அட்வான்ஸ் டிரஸ்ஏஜ் ஒருங்கிணைப்பு பிரிவில் வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து சீனியர் தடை தாண்டும் பிரிவில் போட்டி நடந்தது.

இதில் சென்னை, பெங்களூர்,கோவை, புதுவை,ஊட்டியை சேர்ந்த வீரர்கள் 10 இடங்களில் வைக்கப்பட்ட 90 செ.மீ. உயர தடைகளை தாண்டினார்கள்.

Tags:    

Similar News