பாரதியார் பல்கலைக்கூடத்தில் விஷவண்டு கூடு அழிப்பு
- நடப்பு ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மரங்களில் விஷவண்டு கூடுகள் அதிகளவில் இருப்பதையும் அதில் 100-க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் இருப்பதையும் கண்டறிந்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட த்தில உயர்கல்வி வகுப்பு தொடங்க புதுவை பல்கலைகழகம் அனுமதி அளித்துள்ளது.
நடப்பு ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகளை பாரதியார் பல்கலை கூட முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, உயர்கல்விக்கான புதிய வகுப்புகளுக்கு கூடுதல் இடம் தேவைப்படுவதால் பல்கலை கூட வளாகத்தில் மிகவும் அடர்த்தியாக, காடு போல் வளர்ந்திருந்த மரம், செடி, புதர்களை அப்புறப்ப டுத்தும் பணி நடந்தது.
அப்போது அங்கு இருந்த மரங்களில் விஷவண்டு கூடுகள் அதிகளவில் இருப்பதையும் அதில் 100-க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் இருப்பதையும் கண்டறிந்தனர். இந்த வண்டுகள் கடித்தால் உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் உதவியோடு, தீயணைப்பு வீரர்கள் விஷ வண்டு கூண்டினை தீவைத்து அழித்தனர்.