புதுச்சேரி

 105 டிகிரி கொளுத்திய வெயில்

அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை

Published On 2023-06-04 06:11 GMT   |   Update On 2023-06-04 06:11 GMT
  • வீடுகளில் முடங்கினாலும் அடிக்கடி மின்தடையால் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
  • அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவையில் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்தே கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியது.

கடந்த மே 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி கடந்த 29-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த காலத்தில் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. கடந்த 16-ந் தேதி அதிகபட்மசமாக 106.16 டிகிரி வெப்பம் பதிவானது. கத்திரி வெயில் முடிந்து ஒரு வாரமாகியும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நாள்தோறும் அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக வெப்பத்தின் அளவு 105 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். வீடுகளில் முடங்கினாலும் அடிக்கடி மின்தடையால் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு திசை காற்று, வெப்ப சலனம் காரணமாக புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையத்தின் அறிவிப்பு ஆறுதலை அளித்துள்ளது.

எப்போது வெயிலின் தாக்கம் குறையும் என புதுவை மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News