முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தேர்தலை நிறுத்த கோரிக்கை
- கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் நலச்சங்கத்தின் விதிமீறல் குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
- தவளகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தட்சணா மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் அதிருப்தி ஆளர்கள் சார்பில் கேப்டன் பரமசிவம் தலைமையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வருகிற 11-ந் தேதி சங்க தேர்தலை நிறுத்த வேண்டும். புதிய உறுப்பினர்களை பதிந்து பழைய உறுப்பினர்கள் இன்று வரை சந்தா செலுத்த செய்தும் முறைபடி தேர்தல் வாக்களர் பட்டியல் வெளியிட்டு வேட்புமனுவை பெற்று தேவையான அவகாசத்திற்கு பிறகே தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் நலச்சங்கத்தின் விதிமீறல் குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த சந்திப்பின் போது முன்னாள் தலைவர் கனகராஜ், முன்னாள் பொதுச்செயலாளர் ஜோதி குமார், கலியபெருமாள், ரங்கநாதன், ராஜா, ஜாபர், மற்றும் முன்னாள் ராணுவ வீரரும் தவளகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தட்சணா மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.