புதுச்சேரி

செங்கழுநீரம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.3 லட்சம் நிதியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கிய காட்சி.

கோவில் திருப்பணிக்கு ரூ.3 லட்சம் நிதி-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்

Published On 2022-11-06 07:07 GMT   |   Update On 2022-11-06 07:07 GMT
  • மங்களம் தொகுதி மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த செங்கீழ்நீரம்மன் கோவில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் புனரமைக்கப்படாததால் ஆங்காங்கே விரிசல்கள் உண்டாகி சேதம் அடைந்திருந்தது.
  • இதனைய்டுத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுச்சேரி:

மங்களம் தொகுதி மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த செங்கீழ்நீரம்மன் கோவில் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் புனரமைக்கப்படாததால் ஆங்காங்கே விரிசல்கள் உண்டாகி சேதம் அடைந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கோவிலை புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் புனரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான தேனீ.ஜெயக்குமாரிடம் முறையிட்டனர்.

இதனைய்டுத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு கோவில் திருப்பணிகளை மீண்டும் தொடங்க தனது சொந்த பணம் ரூ.3 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

மேலும், கோவில் திருப்பணிகளை விரைவாக முடிக்குமாறும், தேவையான உதவிகளை செய்வதாகவும் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகளிடம் கூறினார்.

கோவில் நிர்வாகிகளும், அந்த பகுதி மக்களும் திருப்பணியை தொடர நிதி அளித்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர். இன்னும் ஒரிரு நாளில் கோவில் திருப்பணி தொடங்க உள்ளது.

Tags:    

Similar News